
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்ததற்காக ராஜ்யசபா எம்.பி சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்தார். இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமா என்றும் அவர் கடுமையாக சாடினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் 'பிரஹஸ்பதி' (புத்திசாலி) என்று அர்த்தப்படுத்த வேண்டுமா? இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பு அல்ல, அனைவருக்குமான கணக்கெடுப்பு என்று நாங்கள் 20 முறை கூறியுள்ளோம். மத்திய அரசு வரும் நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். அவர்கள் அப்போதும் ஒத்துழைக்க மாட்டார்களா? அவர்கள் இன்போசிஸ் என்பதால் எல்லாம் அறிந்தவர்களா?

