கட்டாக்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் விலகி உள்ளார்.