சென்னை: அனைத்து முதலியார் வேளாளர் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அகமுடைய முதலியார்கள், செங்குந்த முதலியார்கள் உட்பட முதலியாரின சொந்தங்கள் அனைத்து வேளாளர்கள், சேனைத் தலைவர்கள். கவுண்டர், உடையார் செட்டியார். ஆகிய பட்டங்களுடன் பல்வேறு பிரிவுகள் கொண்ட நாம், சமூக நீதியை நிலைநாட்ட, இதுவரை பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதில் நமக்கு ஏற்பட உள்ள நன்மைகள், பாதிப்புகளை நாம் புரிந்துகொள்ள, ஒருமித்த கருத்தை உருவாக்க, ஒரு சில முடிவுகள் எடுக்கஇன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கூடவிருக்கின்றோம். இந்த நிகழ்வானது, முன்னாள் நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜெகதீசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெறவிருக்கின்றது. நமது சமுதாய மக்கள் அனைவரும் வர வேண்டும்.
The post சென்னையில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம்: ஏ.சி.சண்முகம் அறிக்கை appeared first on Dinakaran.