சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் பிப் 27 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் 6 மணி நேரம் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பிப் 27 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.05 முதல் கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள், மறு மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55 மணி முதல் சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 16 புறநகர் ரயில்கள் முழுமையாகவும் 2 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக 12சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.05 மணி முதல் பொன்னேரி வரை 3ரயில்களும், எண்ணூர் வரை 1 ரயில் , மீஞ்சூர் வரை 1 ரயில், சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரி வரை 1 ரயில் என 6 ரயில்கள் இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் பொன்னேரியில் இருந்து காலை 10.13 முதல் 3 ரயில்களும், எண்ணூரில் இருந்து 1 ரயில், மீஞ்சூரில் இருந்து 1 ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், பொன்னேரியில் இருந்து கடற்கரைக்கு 1 ரயில் என 6 ரயில்களும் மறு மார்கத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த 13, 16, 19, 21, 24 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.