சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் கோயில் கட்டுமானத்தை ராணுவத்தினர் இடித்து அகற்றியதால் ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் குளத்துமேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக வீடு கட்டவோ, மாற்றி அமைக்கவோ ராணுவத்தினர் அனுமதியை பெற வேண்டும்.
இந்நிலையில் குளத்துமேடு பகுதியில் 1975ஆம் ஆண்டு கட்டப்பட்ட கருமாரியம்மன் கோயிலில் விரிவாக்கம் செய்யும் வகையில் கான்கிரீட் கட்டடம் எழுப்பதற்கான பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து திடீரென துப்பாக்கியுடன் அங்கு வந்த 20க்கு மேற்பட்ட ராணுவத்தினர் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று கூறி, சிமெண்ட் கான்கிரீட் போடப்பட்ட கம்பிகளையும், அடித்தளத்தையும் அகற்றினர். இதுகுறித்து கேள்வி கேட்க வந்த பொதுமக்களையும் அவர்கள் மிரட்டினர். அங்க வந்த மீனம்பாக்கம் போலீசாரும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
The post சென்னை மீனம்பாக்கத்தில் கோயில் கட்டுமானத்தை ராணுவத்தினர் அகற்றியதால் பரபரப்பு!! appeared first on Dinakaran.