
புல்வாமா: கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி – செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

