கோவை: இந்தியாவில் பல மாநிலங்களில் தேஜ கூட்டணி ஆட்சி நடப்பது போல, தமிழகத்திலும் நல்லாட்சி நடக்கும் என்று தமிழிசை தெரிவித்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அளித்த பேட்டி: நாமக்கல்லில் சிறுநீரகம் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவனைகளில் உடல் உறுப்புகள் விதிமுறைகளை மீறி மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டினருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சி குறித்து டெல்லியில் உள்ள பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் அதுபற்றி பதில் சொல்ல மாட்டேன். அதிமுக பாஜ கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை. இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். மகாராஷ்டிராவில் 78 லட்சம் பேரை பாஜ கூட்டணி அரசு லட்சாதிபதி ஆக்கியுள்ளது. தமிழகத்தில் நாங்கள் அதிமுக உடன் இருப்பதால் டாஸ்மாக்கை கட்டுப்படுத்த திட்டம் வைத்துள்ளோம்.
பெண்களுக்கு மாதம் ரூ.1,500க்கு மேல் உதவி தொகை கிடைப்பதற்கு நாங்கள் திட்டம் கொண்டு வருவோம். நாங்க எல்லாம் சேர்ந்து இருக்கிறோம். அதனால் நிச்சயமாக நல்லாட்சி நடக்கும். இந்தியாவில் பல மாநிலங்களில் தேஜ கூட்டணி ஆட்சி நடப்பது போல, தமிழகத்திலும் நல்லாட்சி நடக்கும். தேஜ கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும், அது பிரமாண்டமான கட்சி தான். எங்க கூட்டணி பிரேக் ஆகாது. நான் உங்களுக்கு பிரேக்கிங் கொடுக்கவே மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை appeared first on Dinakaran.