சென்னை: திருச்செந்தூர் கோயிலின் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.