விசாகப்பட்டினத்தில் ‘திருடன்-போலீஸ்’ விளையாடுவதாகச் சொல்லி மருமகள் ஒருவர் தன் மாமியாரை உயிரோடு எரித்ததாக காவல்துறை கூறியிருக்கிறது. இந்தக் கொலையை அந்தப் பெண் ஒரு விபத்தாக ஜோடிக்க முயற்சி செய்ததாகவும், பின்னர் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

