நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி கொடையாளிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விசாரணை மேற்கொள்ள உத்தரவு அளித்துள்ளது. நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம், தனிக்குழு அமைத்து விசாரணை மாவட்ட மருத்துவ இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிட்னி பாளையம் என கோட் வேர்டு வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. புரோக்கர் கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் ஏழ்மையான பின்னணி கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தொழிலாளர்களை சந்திக்கும் புரோக்கர்கள் அவர்களது சிறுநீரகங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுக்கின்றனர். பின்பு அவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களது சிறுநீரகங்கள் எடுக்கப்படுகிறது. பின்பு அவை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி விற்பனை விவகாரத்தில், தனிக்குழு அமைத்து விசாரணை மாவட்ட மருத்துவ இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி கொடையாளிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.