
புதுடெல்லி: பிஹார் தேர்தலில் சாதி, மத அரசியல் தொடர்வது தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவுக்கு இணையாக 101 தொகுதிகளை பெற்றுள்ளார். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் உயர் சமூகத்தினர் 22 பேர் இடம் பெற்றுள்ளனர். ராஜபுத்திரர்கள் 10, பூமிஹார்கள் 9, பிராமணர்கள் 2, காயஸ்து 1 என்ற எண்ணிக்கையில் இவர்கள் உள்ளனர்.

