நெல்லை: நெல்லை மாநகராட்சியில் 50 கும் மேலான வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் டன் கணக்கில் பொது மக்கள் பயன்படுத்த கூடிய குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கபட்டு வருகிறது. தொடர்ந்து இந்த குப்பைகள் அனைத்தும் லாரிகள் மூலமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் வைத்து இருக்கக்கூடிய. நெல்லை ராமையன்பட்டி பகுதியில் இருக்கக்கூடிய அந்த குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கு 100 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைகிடங்கில் லட்சகணக்கான டன் குப்பைகள் சேர்ந்து வைக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் 3:30 மணி அளவில் திடிர் என தீ பற்றிஎரிய தொடங்கியுள்ளது. இந்த தீ ஆனது காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியதால் 100 ஏக்கர் முழுவதும் இருந்த குப்பைகள் எரிய தொடங்கியது.
இதனால் ராமையன்பட்டி நெல்லையின் மாநகரா பகுதி சுற்று வட்டாரத்தில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும் புகை சூழ்ந்து உள்ளது இதனால் ராமையன்பட்டி சுற்று வட்டார பகுதியில் இருக்கும் மக்கள் தொடர்ந்து மூச்சி தினரால் அவதிப்படு வருகின்றனர்.
தகவல் அரிந்த நெல்லை பாளையங்கோட்டை தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரியும் குப்பைகளை தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் இந்த காற்றின் வேகம் கட்டுபாட்டுக்குள் வராததால் தொடர்ந்து தீ ஆனது எரிந்து கொண்டே இருகிறது.
இந்த தீ ஆனது வேகமாக பரவி அருகில் இருக்கும் எரியாத குப்பைகள்மிது பரவி வருகிறது மாநகராட்சி அதிகாரிகளும் குப்பை கிடங்கில் எரியும் தீயை கட்டுப்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 2வது நாளாக இன்றும் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் மிண்டும் தீ அணைப்பு துறையினர் தொடர்ந்து இரவு முழுவதும் போராடி வருகின்ற நிலையிலும் இந்த தீ ஆனது கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
20 தண்ணிர் லாரிகளுக்கு மேல் வரவழைக்கப்பட்டு தண்ணிரை தீயின் மேல் அடிச்ச போதிலும் அந்த தீ ஆனது கட்டுக்குள் கொண்டுவர முடியததால் தீ அணைப்பு துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
The post நெல்லை ராமையன்பட்டி குபைப் கிடங்கில் 2 வது நாளாக எரியும் தீ appeared first on Dinakaran.