கலசபாக்கம்: கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த பெல்லாரி தேவி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் மனோஜ்குமார்(21). பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்கள் 3 பேருடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே பர்வதமலை கோயிலுக்கு சென்றார். மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு மாலை 5.30 மணியளவில் கீழே இறங்கினர். இரவு 7 மணியளவில் மலை அடிவாரத்தில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே வந்தபோது மனோஜ்குமார், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை மீட்டு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
The post பர்வத மலை ஏறிய மாணவன் பலி appeared first on Dinakaran.