
புதுடெல்லி: பிஹாரின் 243 தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பிஹாரின் புர்னியா மாவட்டத்தில் 15.54% வாக்குப்பதிவாகியுள்ளது.
முதல்கட்ட தேர்தலில் பிஹார் வரலாற்றில் முதல்முறையாக சுமார் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகின. பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தலிலும் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 9 மணி நிலவரம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதை உறுதி செய்துள்ளது.

