
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, மகா கூட்டணியில் இருந்து வெளியேறி 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனாலும், இப்போது வரை மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை.

