
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (நவம்பர் 6) தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகளின் 22 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

