பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா கடந்த ஜன.13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வற்றுவருகிறது.
சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பிரயாக்ராஜ் வந்தனர். இந்நிலையில் இன்றுடன்(பிப்.26) மகாகும்பமேளா பெற உள்ளதால் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் உத்திரபிரதேச அரசு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. நேற்று மாலை 4 மணி முதல் மகாகும்பமேளா பகுதியும், மாலை 6 மணி முதல் பிரயாக்ராஜ் பகுதியும் வாகனங்கள் இல்லாத பகுதியாக மாற்றப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று புனித நீராட வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மகாகும்பமேளாவில் நேற்று வரை 63 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகாகும்பமேளா மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பதால் பிரயாக்ராஜ் வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது மகாகும்பமேளா! appeared first on Dinakaran.