டெல்லி: சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகா சிவராத்திரியாகும். இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு எக்ஸ் தளத்தில் தெரிவித்த வாழ்த்து செய்தியில்;
மகாசிவராத்திரி புனிதப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் அனைவரின் மீதும் பகவான் மகாதேவரின் ஆசீர்வாதம் நிலைத்திருக்க வேண்டும் என்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் எனது பிரார்த்தனைகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்;
மகாசிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள். மஹாசிவராத்திரி என்பது ஒரு புனிதமான சனாதன விழிப்புணர்வு விழா. மந்தநிலையிலிருந்து எழுந்து, குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவைத் தேடவும், சிறந்த மாற்றத்தைத் தழுவவும் ஒரு அழைப்பு இத்திருவிழா. இது நாட்டின் பரந்த நன்மைக்காக சுய விழிப்புணர்வு மற்றும் புத்துயிர் பெறுவதைக் குறிக்கிறது. சிவபெருமான் மற்றும் ஆதி சக்தியின் தெய்வீக சங்கமம் நமக்குத் தேவையான மாற்றத்திற்கான ஆற்றல் வாய்ந்த சக்தியைத் தரட்டும். மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 ஐ உருவாக்க நமது மக்களிடையே ஆன்மீக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும். ஹர ஹர மகாதேவ். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post மகா சிவராத்திரி.. நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!! appeared first on Dinakaran.