மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சியில் ரூ.89 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரூ. 162 கோடியில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.
தரங்கம்பாடி -ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும். சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு மயிலாடுதுறையில் சிலை நிறுவப்படும். குற்றால வாய்க்கால் ரூ.7 கோடியில் புனரமைக்கப்படும். தரங்கம்பாடி வட்டத்தில் 2 கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடியில் ஏற்படுத்தப்படும். சீர்காழி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டித்தரப்படும். பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நிரந்தரமாக டாடா, பை பை சொல்வார்கள் எனவும் தெரிவித்தார்.
The post மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சியில் ரூ.89 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.