சென்னை: மாணவர்கள் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று பெயர் மாற்றத்துக்கு முதல்வரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்தார். திருமாவளவன், சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
சாதியின் பேரால், மதத்தின் பேரால், பொருளாதார வலிமையின்மையால் எந்த வாய்ப்பும் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதை மனதில் வைத்தே, அனைவருக்கும் பொதுவான சம வாய்ப்புகளை வழங்கி, அனைத்துச் சமூகத்தையும் மேலே கொண்டு வர முயற்சித்து வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சியானது, அனைத்து சமூக வளர்ச்சியாக இன்று விரிவடைந்து வருவதையும் பார்க்கிறோம். இந்த நிலையில் முதல்வரை சந்தித்த திமுக அரசின் பாராட்டத்தக்க சாதனைகளில் ஒன்றாக பார்ப்பதாக திருமாவளவன் பேட்டி அளித்தார். சமூக நீதி விடுதிகள் என பெயரை மாற்றி துணிச்சலான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று திருமாவளவன் தெரிவித்தார்.
The post மாணவர்கள் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று பெயர் மாற்றத்துக்கு முதல்வரை சந்தித்து திருமாவளவன் நன்றி..!! appeared first on Dinakaran.