சென்னை: சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் நடைப்பெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தலமையில் இன்று 18.07.2025 சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம் நடைப்பெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாடு மற்றும் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிப் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சரின் அறிவிப்புகள், சுற்றுலாத்துறை அமைச்சரின் அறிவிப்புகள், முத்திரைத் திட்டங்கள், பிற அரசுத்துறைகளிடமிருந்து பெற வேண்டிய திட்டப்பணிகள் குறித்த தடையின்மை சன்றுகள் பெறுவது, தற்போது நடைப்பெற்றுக் கொண்டுயிருக்கும் பணிகள் குறித்தும், புதிய முன்மொழிவுகள் குறித்தும் மற்றும் முடிவுற்ற பணிகள் தற்போதைய நிலை பயண்பாடுகள் குறித்தும், திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் நிறைவடைந்த பணிகளான, தென்கசி மாவட்டம் குன்டாறு அனையில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியை பல்வேறு சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், புதுக்கோட்டை மாவட்டம் முத்துகூடா கடற்கரை மேம்பாட்டுப் பணிகள், திருவள்ளூவர் மாவட்டம் பூண்டி அணை சுற்றுலா மேம்பாட்டு பணிகள், மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் தமிழ்நாடு பிரிவு 2ல் அதிநவீன வசதிகள் கூடிய தங்கும் விடுதி கட்டடம் போன்ற பணிகள் குறித்தும், சுற்றுலாத் தலங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்தும் சுற்றுலாத்துறை உதவி இயக்குநர், பொறியாளர்கள் மற்றும் அனைத்து சுற்றுலா அலுவலர்களுடனும் கலந்துரையாடல் செய்து, சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முதற்கொண்டு அனைத்து வகையான சுற்றுலா சேவைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ள படுகிறதா என சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர். க.மணிவாசன், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச. கவிதா திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
The post மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! appeared first on Dinakaran.