தமிழ்நாட்டில் “மா” விளைச்சல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகளின் நலனைக் காத்திடும் வகையில், மாம்பழ விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை (Market Intervention Scheme) செயல்படுத்தி விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்கிட திட்டத்தினை செயல்படுத்திடகோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஒன்றிய வேளாண்மை – உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கும் எழுதியுள்ள கடிதங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர. சக்கரபாணி நாளை (25.6.2025) புதுதில்லியில் ஒன்றிய வேளாண்மை – உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி, இப்பிரச்சனைக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள உள்ளார்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
The post முதல்வர் எழுதியுள்ள கடிதத்தை ஒன்றிய வேளாண் அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார் அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.