டொயோட்டா நிறுவனம் தனது முதல் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. bZ4X மாடலினை அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2022 டொயோட்டா bZ4X எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டொயோட்டா bZ4X மாடல் ஜப்பானில் உள்ள டொயோட்டா நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. விற்பனைக்கு வரும் முதல் ஆண்டில் மட்டும் டொயோட்டா bZ4X மட்டும் சுமார் 5 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

தோற்றத்தில் bZ4X எஸ்.யு.வி. மாடல் பிரபல மாடலான RAV4 எஸ்.யு.வி.யை விட சற்று நீளமாக இருக்கிறது. இந்த கார் 15 செண்டிமீட்டர் நீண்ட வீல்பேஸ், 5 மில்லிமீட்டர் அதிகமான அகலம் கொண்டிருக்கிறது. மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் டொயோட்டா bZ4X எலெர்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அதிகளவு லெக் ரூம் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

டிரைவ் வசதி:

புதிய bZ4X எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அதிநவீன டிசைனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் முன்புற டிரைவ் (FWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) என இருவித வசதிகளுடன் கிடைக்கும். இந்த காரின் உள்புறம் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதன் செண்டர் கன்சோலில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் டைப் ஏ போர்ட்கள், 12.3 இன்ச் மல்டி மீடியா சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பில்ட் இன் 4ஜி மோடெம் உள்ளது. இதில் ஒரே சமயத்தில் அதிகபட்சம் ஐந்து சாதனங்களை இணைக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் டொயோட்டா நிறுவனம் 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெ.பி.எல். சவுண்ட் சிஸ்டம், எட்டு சேனல்கள் கொண்ட 800 வாட் ஆம்ப்லிஃபையர் மர்றும் 9 இன்ச் சப் வூஃபர் உள்ளிட்டவைகளை வழங்கி இருக்கிறது.

பேட்டரி மற்றும் ரேன்ஜ்:

டொயோட்டா bZ4X எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் FWD வேரியண்ட் 201 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் AWD வேரியண்ட் 214 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிகளில் எட்டிவிடும். டொயோட்டா bZ4X AWD வேரியண்ட் மணிக்கு 0 முதல் 100 கிலமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும்.

புதிய டொயோட்டா bZ4X FWD வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 559 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் AWD வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 540 கிலோமீட்டர் வரை செல்லும். புதிய bZ4X மாடலுடன் பல்வேறு சார்ஜிங் ஆப்ஷன்களை டொயோட்டா வழங்கி இருக்கிறது. இவற்றில் 120 வோல்ட், 240 வோல்ட் சார்ஜர்கள் மற்றும் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர்கள் அடங்கும்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *