
கார்டிப்: வேல்ஸ் – பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியின் போது மைதானத்துக்குள் எலி நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமானது.
வேல்ஸ் நாட்டின் கார்டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் வேல்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின. பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது திடீரென கோல் கீப்பர் திபோ கோர்டோயிஸ் பகுதியின் அருகே எலி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.

