
கோவை: தமிழக அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டங்கள் நேற்று நாடு முழுவதும் தொடங்கின. தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

