சென்னை: ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் எப்போது மத்திய அரசு கொண்டு வந்ததோ அப்போதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள இருளர் காலனி மற்றும் வரத ராஜபுரம் ஆகிய இரண்டு கிராம மக்கள் ஊரையே காலி செய்கிற அளவு ரயில் விபத்தால் உண்டான தீயும், புகை மூட்டமும் இருந்துள்ளது. சென்னை மணலியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு தென்னக சரக்கு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி (13.07.2025) ஞாயிற்றுக் கிழமை சென்றபோது தான் விபத்து நடந்திருக்கிறது.