
மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, 2025 முதல் அரையாண்டில் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காமன்வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடுகளின் பயணிகள் மாஸ்கோவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

