ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 456 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இரவு மீன் பிடித்தபோது, 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஈசாக் பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறை பிடித்தனர்.
அதிலிருந்த மீனவர்கள் அன்பழகன்(40), டல்வின் ராஜ்(45), ஜெகதீஷ்(48), சக்திவேல்(47), எடிசன்(51), சண்முகம்(57), டூதர்(41) ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர், மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுமீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மாலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.