திருத்தணி: திருத்தணியில் ரூ.45 கோடி மதிப்பில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, இப்புதிய கட்டிடத்தில் மின்சாரம், குடிநீர் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. இந்த புதிய கட்டிடத்தில் அனைத்து மருத்துவ சேவைகள் தொடக்க விழா இன்று காலை நடந்தது. திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி, மருத்துவ சேவைகளையும் தொடங்கி வைத்தார். அங்கு சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகளை எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அம்பிகா மற்றும் மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அதிநவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய 4 மாடி மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப ஓரிரு நாட்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை விடுப்பதாக எஸ்.சந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், உதவி செயற்பொறியாளர் முரளி, தலைமை மருத்துவ அலுவலர் விஜய் ஆனந்த், மருத்துவ அலுவலர் அம்பிகா சண்முகம் நகர திமுக செயலாளர் வி.வினோத்குமார், நகர துணை செயலாளர் ஜி.எஸ்.கணேசன், நகர பொருளாளர் டி.எஸ்.ஷியாம்சுந்தர், மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரூ.45 கோடி மதிப்பில் திருத்தணியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சேவை துவக்கம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வரவேற்பு appeared first on Dinakaran.