சென்னை: ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஸ்டாக் மார்கெட் எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த ரோகன் மற்றும் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஆகிய இருவரும் ரூ.5.24 கோடி கடந்த ஆண்டு வாங்கி உள்ளனர்.ஆனால் அவர்களை சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்பதால் மும்பை குற்றப்பிரிவு போலீசில் அஜய் ஜெகதீஷ் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த ரோகனை நேற்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சென்னை கே.கே. நகரில் உள்ள ரவீந்தர் வீட்டுக்கு மும்பை போலீசார்
கைது செய்ய இரவு வந்துள்ளனர்.
தனக்கு கடுமையான உடல் நல பாதிப்பு இருப்பதால் தன்னால் தற்போது வர இயலாது என கூறியுள்ளார். மேலும், மருத்துவரை வரவழைத்து மருத்துவ சான்றிதழ்களை காட்டினார். இதனை அடுத்து அவரை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி, சம்மன் வழங்கிவிட்டு அவருடைய கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். கிண்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொளத்தூரை சேர்ந்த பாண்டி ஆகிய இருவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போலீசார் உதவியுடன் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பிறகு ட்ரான்சிட் வாரண்ட் வாங்கி மணிகண்டன் மற்றும் பாண்டி ஆகிய இருவரை மும்பை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.
The post ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்..!! appeared first on Dinakaran.