சென்னை: ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் “அய்யன் வள்ளுவர் கலையரங்கம்” மேம்படுத்தப்பட்டுள்ளது. 1,330 குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு, குறள் மணிமாடம் புதிய வடிவம் பெற்றுள்ளது. 100 பேர் அமரும் வசதியுடன் “திருக்குறள் ஆய்வரங்கம், ஆராய்ச்சி நூலகம்” புதுப்பிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தை பார்வையிட வரும் மக்களின் வசதிக்காக 3,336 சதுர அடியில் உணவகம், 27,000 சதுர அடி பரப்பில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
The post ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.