சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிக வளாகங்கள் குறித்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன,
* வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம்.
* வணிக வளாக கட்டடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிப்பு.
* ஒவ்வொரு ஆண்டும் 15% வாடகை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 5% மட்டுமே உயர்த்தப்படும்.
* சென்னை மாநகராட்சியில் உள்ள 127 வணிக வளாகங்களில் உள்ள 5,914 கடைகளுக்கும் மாதம் ரூ.180 கோடி வசூல் செய்யப்பட்டுகிறது.
இக்கூட்டத்தில்துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வணிக வளாக கட்டடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.