
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடியும், இந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன என்று அறிவித்தார்.

