சென்னை: நடிகை விஜயலட்சுமி வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகவில்லை. சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக சீமான் இன்று போலீஸ் முன் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் சார்பில், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சீமானிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
The post விஜயலட்சுமி வழக்கு – சீமான் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.