சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
விளைச்சல் அதிகரிக்கும் வகையில், தண்ணீர் பற்றாக்குறை இடர்பாடுகளை தாங்கும் வகையிலும் மரபணு திருத்தப்பட்ட புதிய 2 நெல் விதைகளை நாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால் வேறு ஒரு பெயரில் சந்தைக்கு வருகின்றன. இதனை ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது.
பிரதான் மந்திரி கிஸான் சமான் யோஜனா திட்டம் என்ற பெயரில் 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒரு தடவை ரூ.2 ஆயிரம் என வருடத்திற்கு மூன்று தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மறு ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வேளாண் ஊக்க மானியமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் வேளாண் ஊக்க மானியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.