நாகப்பட்டினம்: திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்திற்கான, நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி அளப்பகுதியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது காஞ்சிபுரம் பூந்தண்டலத்தை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ்(52) ஓட்டி வந்த காரும், மற்றொரு காரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் இறந்தார்.
இதுகுறித்து நாகப்பட்டினம் எஸ்.பி. செல்வகுமார் கூறும்போது, கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் மறுநாள் (13ம் தேதி) காவல்துறையின் அனுமதியின்றி படப்பிடிப்பு நடந்துள்ளது மேலும் கார் சேஸிங் காட்சியில் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் எப்சி கண்டிஷன் மற்றும் பர்மிட் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
The post ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு; அனுமதியின்றி படப்பிடிப்பு சேஷிங் காட்சி கார் பறிமுதல்: எஸ்பி பேட்டி appeared first on Dinakaran.