சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 27, 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.
இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், ஒன்றிய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும் 26ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 27ம் தேதி தமிழகம் வருகிறார்.
The post 2 நாள் பயணமாக ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..! appeared first on Dinakaran.