in ,

ஆப்கன் நிலச்சரிவில் 2,000 பேர் பலி? ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது

2,000 Afghan civilians killed in a landslide A village is buried in the soilகாபூல்: ஆப்கானிஸ்தானின், வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது. இங்கு வசித்த, 2,100 பேர், இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.

 

ஆப்கானிஸ்தானில், அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ஷான் மாகாணம், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மலைகள் நிறைந்த இந்த மாநிலத்தில், மழைக் காலங்களில், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். ஆப்கனின் பல பகுதிகளில், கடந்த சில தினங்களாக, கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, இந்த மாகாணத்தில் உள்ள, ஆப் கோஷ்க், அபிபரிக் கிராமங்க ளில், தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அப்போது, இங்கிருந்த ஒரு மலைத் தொடரில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், 500க்கும் அதிகமான வீடுகள், நிலச் சரிவால் மூடப்பட்டன. அங்கு வசித்த ஏராளமான மக்கள், மண்ணுக்குள் புதைந்தனர். இதுவரை, 500 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், 2,100 பேரை காணவில்லை என, மாகாண நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

 

இதற்கிடையே, பேரிடர் மீட்பு குழுவினரும், அருகில் உள்ள கிராம மக்களும், மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 350 உடல்கள் மீட்கப்பட்டன. நிலச்சரிவில் காயமடைந்த மற்றும் வீடிழந்த மக்களுக்கு, உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. நவீன இயந்திரங்கள் இல்லாததால், ஐ.நா., மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலக உதவியுடன், கிராம மக்கள், கைகளாலும், மண்வெட்டிகளாலும், கிராமத்தின் மீது விழுந்துள்ள மலைக் கற்களை தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளர். தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை, மீட்பு பணியின் வேகத்தை குறைத்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப்போர் தீவிரம்: ஐரோப்பிய பார்வையாளர்கள் விடுவிப்பு

பொருளாதார வளர்ச்சி குறையும்