வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: