நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு, நமக்கு வந்து சேரும் முன்னாலேயே வீணாக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரி யுமா?

உலக அளவில் மொத்த தானிய உற்பத்தியில் 30% தானியங்கள் யாருக்கும் பயனின்றி வீணாவதாக கூறப்படுகிறது. அதாவது 280 மில்லியன் டன் தானியங்களை நுகர்வோர் வீணாக்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம், உலகில் சுமார் 100 கோடி மக்கள் பசியால் அவதிப்படுவதாகக் கூறுகிறது ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. இது விவசாயிகளின் உழைப்பு, நீர், ஆற்றல், நிலம் மற்றும் அந்த உணவுப் பொருளை உருவாக்கத் தேவைப்பட்ட அனைத் துக் காரணிகளும் வீணாக்கப் படுவதையே காட்டுகிறது.

food_waste

மாபெரும் சவால்

உலக மக்களுக்குத் தேவைப் படும் உணவைவிட அதிகமாகத் தயாரிக்கப்பட்டாலும், கடைசியில் நுகர்வோராகிய நம்மை வந்தடை யும் வரை, ஏராளமான இழப்பு ஏற்படுகிறது.இதனாலேயே ‘பசிக் கொடுமை’ என்பது அவசரமாகவும் அவசியமாகவும் ஒழிக்கப்பட வேண்டிய மாபெரும் சவாலாக நிற்கிறது.

உணவு உருவாக்கப்படுவதில் இருந்து நுகர்வோரை அடையும் வரை 2 வழிகளில் வீணாகிறது. உணவுப் பொருள் நாசம்/ இழப்பு மற்றும் உணவுப்பொருள் விரயம் என்பவைதான் அந்த இரண்டு வழிகள்.

விற்பனையாளர், நுகர்வோர் ஆகிய இருவரும் வீணாக்காமல், தானாகவே பயன்படாமல் போகும் உணவுகளை உணவுப் பொருள் விரயம் எனக் கொள்ளலாம். தோட் டத்தில் காய்த்து நுகர்வோரிடம் விற்பதற்காக வண்டிகளில் கொண்டு செல்லப்படும் பழங்கள் கீழே விழுந்து யாருக்கும் பயன்படாமல் போவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உணவுப் பொருள் விரயம்

உணவுப் பொருள் மீதமாகியும், உரிய காலத்தில் உட்கொள்ளாமல் கெட்டுப்போயும் வீணாவதை உணவுப் பொருள் விரயம் என்கின் றனர். இது தேதி காலாவதியாவது, முறையற்ற சேமிப்பு, கலப்படம், தேவைக்கு அதிகமாக வாங்குவது போன்ற காரணிகளால் நிகழ்கின் றன.

உலகம் முழுவதும் உணவு வீணாவதைத் தடுக்க ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐ.நா. அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள், அரசுகள், தனியார் வணிக அமைப்புகள் இடையே உணவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங் குகள், செயல்பாடுகளை மேற் கொண்டு வருகிறது.

உலகளாவிய முயற்சி

உலகளாவிய இந்த முயற்சி 4 முக்கிய குறிக்கோள்களுடன் செயல்படுகிறது.

1. உணவு இழப்பு மற்றும் நாசத் துக்கான காரணிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது.

2. உணவுப் பொருள் வீணாவதில் உலக அளவில் எடுக்கப் படும் முயற்சிகளை ஒருங்கி ணைப்பது.

3. உணவு வீணாவதைத் தடுக்க கொள்கைகள், வளர்ச்சித் திட்டங்கள், செயல்பாடுகள், தீர்வுகளை உருவாக்குவது.

4. அரசு, தனியார் அமைப்புகள் பங்காற்றும் செயல்திட்டங் களுக்கு முழுமையாக ஆதரவு அளிப்பது.

ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த நாள் உலக உணவு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இன்று உலக உணவு தினம். உணவு வீணாவதை தடுப்போம். பசியே இல்லாத நிலையை உருவாக்குவோம்!

எவ்வளவு வீணாக்குகிறோம்?

* உலக அளவில் மொத்த தானிய உற்பத்தியில் 30% வீணாகிறது. அதாவது சுமார் 286 மில்லியன் டன் தானியங்களை நுகர்வோர் வீணாக்குகின்றனர்.

* 20% பால் பொருட்கள் வீணாகின்றன.

* 35% கடல் உணவுகள் வீணாகின்றன. இது 300 கோடி சால்மன் மீன்களுக்குச் சமம்.

* 45% பழங்கள், காய்கறிகள் வீணாகின்றன.

* 20% இறைச்சி வீணாகிறது. இது 75 மில்லியன் பசுக்களுக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

* 20% எண்ணெய், பருப்பு வகைகள் வீணாகின்றன.

* 45% கிழங்குகள் வீணாகின்றன. இது உருளைக்கிழங்குகள் கொண்ட 10 லட்சம் மூட்டைகளுக்குச் சமம்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *