30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்

Tamil_News_large_934437

புதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் .

இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 பில்லியன் டாலர் ( உத்தேசமாக ரூ. 42 ஆயிரம் கோடி )க்கு போட்டி போடும் அளவிற்கு தொட்டுள்ளது.

 

கணக்கில் வராத பணம் குரோர்பதி வேட்பாளர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் மூலம் இந்த தொகை நாட்டிற்குள் புழக்கத்தில் வரவுள்ளது. இதன் மூலம் 543 வேட்பாளர்கள் இந்த செலவை செய்கின்றனர்.
வேட்பாளர்கள்- 4 ஆயிரம் கோடி :


கடந்த 1996 லோக்சபா தேர்தலில் 2 ஆயிரத்து 500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2004 ல் 10 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. வரவிருக்கும் தேர்தலில் 30 ஆயிரம் கோடியாக உயர்கிறது.

 

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP