கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு மேம்பாலத்தில் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஆம்னி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன.
அப்போது ஆம்னி பேருந்தின் முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தியதால் பின்னால் அடுத்தடுத்து வந்த 4 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி பெரும் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 4 ஆம்னி பேருந்துகளில் சிக்கி படுகாயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 36 பேரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர், பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post 4 ஆம்னி பேருந்துகள் மோதல்: 36 பேர் படுகாயம் appeared first on Dinakaran.