மும்பை: இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அமெரிக்க சந்தையிலிருந்து கிரீன் பாண்ட் மூலமாக 600 மில்லியன் டாலர் திரட்டும் திட்டத்தை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது. 20 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்ட இந்த கடன்பத்திர வெளியீட்டின்போது அமெரிக்க முதலீட்டு சந்தையில் மூன்று மடங்குக்கும் அதிகமான வரவேற்பு காணப்பட்டது. இருப்பினும், குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அந்த கடன்பத்திர விற்பனை திட்டத்தை ரத்து செய்வதாக பங்குச் சந்தையிடம் அதானி கிரீன் எனர்ஜி தெரிவித்துள்ளது.
ஹின்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து கடந்த ஆண்டும் இதேபோன்று ரூ.20,000 கோடி தொடர் பங்கு வெளியீட்டினை (எப்பிஓ) அதானி எண்டர்பிரைசஸ் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.