மாஸ்கோ: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து, ஆறு ஏவுகணைகளை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் ப்ரையான்ஸ்க் பகுதியில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ATACMS ரக ஏவுகணை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஏவுகணைகளையும் ரஷ்ய ராணுவம் வீழ்த்தியதாகவும், வானில் வெடித்துச் சிதறிய ஏவுகணைகள் குறிப்பிடப்படாத ராணுவ முகாம்கள் அருகே விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.