விருத்தாச்சலம்: சத்யா பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 6 மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர். 2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சத்யா கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வரும் நிலையில் சத்யா பன்னீர்செல்வம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post 6 மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு சோதனை: சத்யா பன்னீர்செல்வம் மயக்கம் appeared first on Dinakaran.