புதுடெல்லி: ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இது ரஷ்யாவில் ‘தி கிரேட் பேட்டிரியாட்டிக் வார்’ என அழைக்கப்படுகிறது. இதன் 80-ம் ஆண்டு வெற்றி தினத்தை மே 9-ம் தேதி,தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.