
சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.
மேலும் லைவ் ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல், இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.

