Category: கட்டுரை

Latest articles about politics. science, medicine, business and sports

என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய…

இனியாவது அரசியல் நடக்குமா?

ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில்…

உதை அங்கே… உறுத்தல் இங்கே!- சில அனுபவக் குறிப்புகள்

செய்தியை முந்தித் தருவது… முழுமையாகத் தருவது… பல கோணங்களில் தருவது… சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாததையும் சேர்த்துத் தருவது என்று சொல்லிக் கொண்டு இன்று செய்திச் சேனல்கள் டிஆர்பி-க்காக செய்கிற அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன்தான். நேபாள நிலநடுக்க துயரத்தில்…

பட்ஜெட் தொடரின் 2-ம் பாகமும் ராகுலின் புதிய முகமும்

சமூக வலைத்தளங்களில் கலாய்ப்புகளுக்கு ஆளாவதில் ராகுல் காந்தி இந்தியாவின் ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று சொல்லும் அளவுக்கு அவர் மிகை மிஞ்சியே விமர்சிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட 56 நாட்கள் விடுப்பு #ராகுல்மிஸ்ஸிங் என டிரெண்டானது. அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும்,…

நேதாஜியை வேவு பார்த்தாரா நேரு?

நேருவைப் பற்றிய அவதூறுகள் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து விதைக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் மர்மமானது என்றும் அவர் ஸ்டாலினால் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலை ஒன்றில் மரணமடைந்தார் என்றும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. நேதாஜி குடும்பத்தை வேவு பார்த்தது…

டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில்…

நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

தேனியில் நீயூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்| கோப்புப் படம்: ஜி.கார்த்திகேயன். ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி…

சுத்தம் ‘நூறு’ போடும்: இன்று உலக சுகாதார தினம்

1950 ம் ஆண்டு முதல் ஏப். 7 ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இயற்கை முறை வேளாண்மை, சுத்தமாக சமைப்பது, முழுமையாக சமைப்பது, உணவு கெட்டுப்போகாமல் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பது, சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு நோக்கம். நமது…

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் நன்மையா?- இல்லையென்கிறது ஆய்வு

தினமும் ஓர் ஆப்பிள் தின்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தில்லை. இது ஆப்பிளின் நன்மையை விளக்க சொல்லப் படும் ஆங்கிலப் பழமொழி. ஆனால், இது அந்த அளவுக்கு உண்மையில்லை என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றனர. தினமும் ஆப்பிள் தின்பவர்…

மீள்வது எப்போது? தமிழக பட்ஜெட்

தமிழக அரசின் 2015-16-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் எதிர்பார்த்தபடியே புதிய வரிகள் ஏதும் இல்லை. இப்போதைய வரி விகிதங்களும் மாற்றப்படவில்லை. மொத்தம் ரூ. 650 கோடி மதிப்புக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் மொத்த வருவாய் ரூ. 1,42,681.33 கோடியாகவும்,…

குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்

சிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக்…

ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?

லங்காஷயர் மில் தொழிலாளர்களுடன் காந்தி. காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா? புரட்சியை மழுங்கடித்தாரா? ‘காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி’ என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல்…

சாதியை ஒழிப்பது எப்படி?

நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் சுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று…

நல் மறுவரவு அர்விந்த்!

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, தனிச்சிறப்பான, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் வெற்றியை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக்…

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை துறந்ததையடுத்து இந்த முறை அந்தக் கட்சி வெற்றி பெறுவது கடினம் என்றும், லோக்சபா தேர்தல்களில் பாஜக சந்தித்த மிகப்பெரிய வெற்றிகளை அடுத்து டெல்லியிலும் மக்கள் பாஜக-விற்கு…

ஒரு நிமிடக் கதை: பணம்!

“மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள். “சரிம்மா!” என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது. ‘பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள்…