எண்ணெய்ச் சந்தையை இனி ஆளப்போவது யார்?

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த செப்டம்பருக்குப் பிறகு 50% சரிந்துவிட்டது. எண்ணெய்த் துறையைப் பொறுத்தவரையில் வரலாறு மீண்டும் திரும்பியிருப்பதாகவே கருத இடமிருக்கிறது. பல பத்தாண்டுகளாக எண்ணெய் விலை, உற்பத்தி இரண்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக சவூதி அரேபியாவும் பாரசீக… Read more

காபி விற்பனையில் குவியும் கோடிகள்!

தேசிய நெடுஞ்சாலை 45. சென்னை யிலிருந்து திருச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். செங்கல் பட்டை நெருங்கும்போது, சாலையின் இரு பக்கங்களிலும் சங்கிலித் தொட ராக, “கும்பகோணம் டிகிரி காபி”, “ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி” என்று போர்டுகள் வைத்த ஏகப்பட்ட காபிக் கடைகள்.… Read more

கனவு நனவானதா? – விவேகானந்தர்

இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை நகர்த்த உங்கள் தோள்களைக் கொடுங்கள்.’ “இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்’- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள். சமயத்… Read more

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

ஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால்… Read more

அதிபர் ஒபாமாவின் ‘பீஸ்ட்’ கார் ஒரு நடமாடும் கோட்டை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ‘பீஸ்ட்’ கார், ஒரு நடமாடும் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம், எதிரிகளின் குண்டுகளில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர்த்தாக்குதல் நடத்தத் தேவையான ஆயுதங்கள், விபத்துகளில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள், எந்த இடத்தில் இருந்தாலும்… Read more

துணிவே தொழில் – திறமையான சிஇஓ அவசியமா?

புதியதாக தொழில் தொடங்குவது வாழ்க்கையை பணயம் வைப்பதைப் போன்ற முயற்சி. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவத்துக்கு உள்ள மதிப்பு விலை மதிக்க முடியாதது. விமானியாக முன் அனுபவம் இல்லாதபோது நீங்கள் விமானத்தை ஓட்ட முன் வருவீர்களா? அத்தகைய முட்டாள்தனமான முடிவை ஒருபோதும்… Read more

வேண்டாம் ரசாயன உரங்கள்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன. இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம்… Read more

போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

குலவையிட்டுக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. நாளை போகி பண்டிகை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கை; சான்றோர் வாக்கு. மூத்தோர் வழியைக் காரணம் அறியாமலேயே போற்றுவதும் தூற்றுவதும் அன்றாட வழக்கமாகிவிட்ட இன்றைய நாளில் போகிக் கொண்டாட்டத்தைக்… Read more

இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

பணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர்.… Read more

காந்தி சகாப்த உதயம்!

இருபத்து மூன்று வயதில் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் சட்ட உதவியாளராகப் பணியேற்று 1893 மே 23 அன்று தென்னாப்பிரிக்கா சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் நடத்திய “புனிதர்’ பாரிஸ்டர் காந்தி 1914 வரை கோட்டும் சூட்டும் டையுமாக நவநாகரிக உடையில்… Read more

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு. ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத… Read more

கடனாளியாக வேண்டாம்

இன்றைய நிலையில் இரண்டு பேர் சந்தித்தால், அவர்களது பேச்சில் ஒருபகுதி கடன் தொடர்பாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும், சேமிப்புக்கு வழியில்லாத சூழலே நிலவுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவு செய்வது, பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச்… Read more

சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்?

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக… Read more

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை

துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது. “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார். உண்மைதான்; வயதாக… Read more

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

கால் நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக் கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன. தமிழ் நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக் கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார,… Read more

காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

இரு நாட்டுத் தலைவர்களின் அரசியல் விளையாட்டுக்குப் பகடைக்காய்தான் காஷ்மீரா? ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பிரதானமான நாட்டுக் கவலைகளில் ஒன்றாக காஷ்மீர் இருக்கிறது. தன் நாடு வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது ஒரு குடிமகனுக்குத் தன் சொந்த வலிமையை உணர்வதாக இருக்கக்கூடும். அதே சமயம்,… Read more