Category: சிந்தனைக் களம்

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம்…

வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு

சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம் அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண்ணம்…

உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நாம் சந்தைகளில் வாங்கும்…

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே.…

மோடி 365° – காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

கடந்த ஓராண்டில் இந்தியாவை மாற்றிவிட்டதாக நரேந்திர மோடி நம்புகிறார். வெளிநாடுகளில் குறிப்பாக அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசும்போது இதை அவர் வலியுறுத்துகிறார். ஆனால், இந்தியாவில் பேசுவதில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருவேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார்.…

ஃபேஸ்புக்: நண்பரா, எதிரியா?

ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ஃபேஸ்புக்கின் 140 கோடிப் பயனாளிகளும், அந்தக்…

மனசாட்சிக்கு ஒரு சவால்

நம் நீதியமைப்பு முறை யாருக்குச் சாதகமானது, யாருக்கு எதிரானது என்பதற்கான உதாரணங்கள்தான் சல்மான் கான் வழக்கும், விசாரணைக் கைதிகளாக 2,78,000 பேர் சிறையில் வாடுவதும். வழக்கு விசாரணை முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்…

என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய…

இனியாவது அரசியல் நடக்குமா?

ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில்…

இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு

ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன. 2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது…

புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப்…

ஜனநாயகத்துக்கு மரியாதை

“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய…

தலைவர்களா இவர்கள்?

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் பல சிறந்த தலைவர்களையும், நாடாளுமன்ற நாகரிகம் நிறைந்த உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, அதாவது கடந்த முப்பதாண்டு காலமாக, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் காணப்படும் தரம் குறைந்த நிலை, மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்துகிறது.…

மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!

பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவர்களுக்கான அஞ்சலி! இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு! பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற…

வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட…